இன்றைய 40-வது போட்டியில் ராஜஸ்தான் Vs ஹைதராபாத் அணிகள் மோதியது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் பந்து வீச தேர்வு செய்தது.
ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ராபின் உத்தப்பா பென் ஸ்டோக்ஸ் இறங்க நிதானமாக விளையாடிய உத்தப்பா 19 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர், களமிறங்கிய சஞ்சு சாம்சன், பென் ஸ்டோக்ஸ் உடன் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
சிறப்பாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் 36 ரன் எடுத்து விக்கெட்டை இழக்க, அடுத்த இரண்டு பந்தில் பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 154 ரன்கள் எடுத்தனர்.
ஹைதராபாத் அணி 155 ரன்கள் இலக்குடன் தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் வார்னர் இருவரும் களமிறங்கினர். முதல் மூன்று ஓவரிலே ஜானி பேர்ஸ்டோவ் 10, டேவிட் வார்னர் 4 ரன்னில் விக்கெட்டை இழக்க பின்னர், களம் கண்ட விஜய் சங்கர், மனிஷ் பாண்டே இருவரும் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் விளாசினார். இறுதியாக ஹைதராபாத் 18.1 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 156 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். கடைசிவரை களத்தில் விஜய் சங்கர் 52*, மனிஷ் பாண்டே 83* ரன்களுடன் களத்தில் நின்றனர்.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…
சென்னை : சமீபகாலமாகவே சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்டு…
சென்னை : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசிய விஷயம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.…
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருந்த இந்தியா - பாகிஸ்தான் இரண்டு அணிகளும் மோதிய சாம்பியன்ஸ் டிராபி தொடரின்…
தொட்டதெல்லாம் தங்கம் என்கிற வகையில் பிரதீப் ரங்கநாதன் நடிகராக களமிறங்கிய பிறகு அவர் நடிக்கும் படங்களும், இயக்குனராக இயக்கிய படங்களும்…