#IPL2020: 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹைதராபாத்..!

Default Image

இன்றைய 40-வது போட்டியில் ராஜஸ்தான் Vs ஹைதராபாத் அணிகள் மோதியது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் பந்து வீச தேர்வு செய்தது.

ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ராபின் உத்தப்பா பென் ஸ்டோக்ஸ் இறங்க நிதானமாக விளையாடிய உத்தப்பா 19 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர், களமிறங்கிய சஞ்சு சாம்சன், பென் ஸ்டோக்ஸ் உடன் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.

சிறப்பாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் 36 ரன் எடுத்து விக்கெட்டை இழக்க, அடுத்த இரண்டு பந்தில் பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 154 ரன்கள் எடுத்தனர்.

ஹைதராபாத் அணி 155 ரன்கள் இலக்குடன் தொடக்க வீரர்களாக  ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் வார்னர் இருவரும் களமிறங்கினர். முதல் மூன்று ஓவரிலே ஜானி பேர்ஸ்டோவ் 10, டேவிட் வார்னர் 4 ரன்னில் விக்கெட்டை இழக்க பின்னர், களம் கண்ட விஜய் சங்கர், மனிஷ் பாண்டே இருவரும் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.

சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் விளாசினார். இறுதியாக ஹைதராபாத் 18.1 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 156 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். கடைசிவரை களத்தில் விஜய் சங்கர் 52*, மனிஷ் பாண்டே 83* ரன்களுடன் களத்தில் நின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்