#IPL2020: சிறப்பாக பந்து வீசிய ஹோல்டர்..155 ரன் இலக்கு வைத்த ராஜஸ்தான்..!
இன்றைய 40-வது போட்டியில் ராஜஸ்தான் Vs ஹைதராபாத் அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் பந்து வீச தேர்வு செய்தது.
ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ராபின் உத்தப்பா
பென் ஸ்டோக்ஸ் இறங்க நிதானமாக விளையாடிய உத்தப்பா 19 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர், களமிறங்கிய சஞ்சு சாம்சன், பென் ஸ்டோக்ஸ் உடன் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
சிறப்பாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் 36 ரன் எடுத்து விக்கெட்டை இழக்க, அடுத்த இரண்டு பந்தில் பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை பறிகொடுத்தார். இதைத்தொடர்ந்து, மத்தியில் இறங்கிய ஸ்டீவன் ஸ்மித் , ரியான் பராக் ஓரளவு ரன்கள் எடுக்க இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 154 ரன்கள் எடுத்தனர்.
ஹைதராபாத் அணி 155 ரன்கள் இலக்குடன் களமிறங்க உள்ளது. இப்போட்டியில் ஜேசன் ஹோல்டர் 4 ஓவர் வீசி 33 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டை பறித்தார்.