#IPL2020:ஹைதராபாத் அணிக்கு 190 ரன்கள் இலக்கை நிர்ணயித்த டெல்லி..!

ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று நடைபெற்றுவரும் இரண்டாம் குவாலிபையர் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதி வருகிறது.
டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் தேர்வு செய்தனர். டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஷிகர் தவான் இருவரும் களமிறங்கினர். சிறப்பாக விளையாடி வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் 38 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 21 ரன்னில் விக்கெட்டை இழக்க பின்னர் தவான், ஹெட்மியர் இருவரும் கூட்டணி அமைத்து அணிகையை உயர்த்தினர். சிறப்பாக விளையாடி வந்த ஷிகர் தவான் 78 ரன்கள் குவித்தார். இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்து 189 ரன்கள் எடுத்தனர்.
ஹெட்மியர் 42 * ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். 190ரன்கள் இலக்குடன் ஹைதராபாத் அணி களமிறக்க உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025