#CSK-பவுலர்களுக்குப் பாராட்டு..!இதைச் செய்யத் தவறினோம்..ரோகித்!

Default Image

அபுதாபியில் நடைபெற்ற IPL2020  முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சிஎஸ்கே அணியிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியில்  கேப்டன் ரோஹித் சர்மாவை (12), பியூஷ் சாவ்லாவின் லெக் ஸ்பின்னை வைத்து தோனி அழகாக வீழ்த்த வியூகம் அமைத்து அதில் வெற்றியும் பெற்றார். அதே போல சாம் கரனை மீண்டும் பவுலிங் செய்ய அழைத்து அதிரடி அபாய வீரர் குவிண்டன் டி காக்கை (33)  ரன்னில் அவருடைய விக்கெட்டை வீழ்த்தினார்.

Image

இந்நிலையில் முதலில் அதிரடியாக விளாசிய மும்பை அணியை தடுமாற  வைத்தது சென்னை அணி 20 ஓவர் முடிவில் மும்பை 162/9 விக்கெட்க்குள் சுருட்டியது.

163 என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 6/2 என்று ஆரம்பத்தில் ஆட்டம் கண்டது அந்த அணியை அந்நிலையிலிருந்து ராயுடு, டுபிளெசிஸின் அபார அரைசதங்கள் மிட்டது. கடைசியில் சாம் கரன் 6 பந்துகளில் 18 ரன்கள் விளாசிய போதே சிஎஸ்கே வெற்றியை உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் முதல் ஆட்டம் மும்பைக்கு ஏமாற்றமாக  முடிந்தது முதல் ஆட்டம் குறித்து கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:

டுபிளெசிஸ், ராயுடு போல் செட்டில் ஆன பிறகு பேட்ஸ்மென் மேலே கொண்டு சென்றிருக்க வேண்டும் ஆனால் நாங்கள் இதைச் செய்யத் தவறி விட்டோம்.

Image

சிஎஸ்கே பவுலர்களுக்கு என்னுடைய பாராட்டுகள், எங்களை எப்போதும் ஒருவிதமான பயத்திலேயே வைத்திருந்தனர்.

நாங்கள் சில தவறுகளைச் செய்தோம். இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும். மைதானத்தில் எங்களை ஊக்குவிக்க ரசிகர்கள் இல்லாத நிலையானது எங்களுக்குப் பழக்கமானதல்ல. ஆனால் மைதானத்தில் சிலபல சப்தங்களை கொண்டு வந்த நிகழ்வில் ஐபிஎல் பிரமாதமாக யோசித்தது.

Image

மேலும் பனிப்பொழிவுக்குப் பிறகு பிட்ச் நன்றாக இருந்தது. பெரிய மைதானங்களில் நாங்கள் விளையாட வில்லை என்றில்லை. ஆனால் களவியூக இடைவெளிகளை மிகவும் சரியாகப் பயன்படுத்த வேண்டும். சிங்கிள்ஸ், இரண்டுகள் எடுக்க வேண்டும். மேலும் களத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து செய்ய வேண்டும் என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்