#IPL2020:முட்டும் சென்னைVSராஜஸ்தான்.!இன்று பலபரீச்சை

Published by
Kaliraj

#IPL2020: இன்று சென்னைVSராஜஸ்தான் பலபரீச்சை நடத்தவுள்ளது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி IPL2020 ன் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பழிவாங்கி கொண்டது.

மும்பையை வீழ்த்தி சரியான பதிலடி கொடுத்த சென்னை அந்த ஆட்டத்தில் சென்னை அணியின் தொடக்க வீரர்களான முரளி விஜய், ஷேன் வாட்சன் ஆகியோர் மட்டுமே அணிக்கு ஏமாற்றம் அளித்தனர். ஆனால் அம்பத்தி ராயுடு, பாப் டு பிளிஸ்சிஸ் அடித்து நொறுக்கி அரை சதம் கண்டதுடன் அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

அதே போல் பந்து வீச்சில் நிகிடி, தீபக் சாஹர், ரவீந்திர ஜடேஜா, பியுஷ் சாவ்லா, சாம் கர்ரன் ஆகியோர் விக்கெட்டை கைப்பற்றி மும்பை அணி வீரர்களை ஐயப்பட வைத்தனர் என்று மும்பை கேப்டன் ரோகித் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆட்டத்தில் காயம் காரணமாக விளையாடாத வெய்ன் பிராவோ இன்றைய ஆட்டத்திலும் ஆடமாட்டார் என்று அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் ஆட்டத்தில் பெற்ற வெற்றி நம்பிக்கையுடன் சென்னை அணி இன்று  களம் காணும்.

அதே போல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான ஸ்டீவன் சுமித்  உள்ளார்.இவர்  சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கு முன்பு பயிற்சியில் ஈடுபட்ட போது பந்து தலையில் தாக்கியதால் அந்த தொடரில் விளையாடவில்லை. அதன் தாக்கம் காரணமாக இன்றைய ஆட்டத்தில் அவர் ஆடுவாரா? என்ற கேள்வி கிரிக்கெட் விமர்சகர்கள் முன்னெழுப்பு கின்றனர்.

ஆனால் ஸ்டீவன் சுமித் முழு உடல் தகுதியை எட்டி விட்டதால் ஐ.பி.எல். போட்டியில் தொடக்கம் முதலே நல்ல நிலையில் விளையாடுவார் என்று ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன்ட்ரூ மெக்டொனால்டு நேற்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

அதேநேரத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தந்தையை அருகில் இருந்து கவனித்து வருவதால் தலைசிறந்த ஆல்-ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் முதல் கட்ட ஆட்டங்களில் விளையாடாதது அந்த அணிக்கு பெரும் இழப்பு ஆகும்.

குடும்பத்தினருடன் வருகை தந்து இருப்பதால் 6 நாட்கள் தனிமைப்படுத்துதலை மேற்கொண்டு இருக்கும் ஜோஸ் பட்லர் இன்றைய ஆட்டத்தில் விளையாட முடியாது. வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் உள்ளிட்ட சிறந்த பவுலர்கள் அந்த அணியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுழற்பந்து வீச்சுக்கு அனுகூலமான அமீரக ஆடுகளத்தில் சென்னை அணியின் சவாலை சமாளிப்பது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சற்று கடினமாகவே இருக்கும். ஆனாலும் இரு அணியிலும் சிறந்த வீரர்கள் பங்கு வகிப்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Recent Posts

பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பை சொல்லும் போட்டியாளர்? டேஞ்சர் ஜோனில் சிக்கிய இருவர்!

பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பை சொல்லும் போட்டியாளர்? டேஞ்சர் ஜோனில் சிக்கிய இருவர்!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…

48 mins ago

“இந்தி மாதம் கொண்டாடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…

1 hour ago

‘நிரந்தர பொதுச்செயலாளர்’ விவகாரம்., தவெக தொண்டர்களுக்கு கண்டிஷன் போட்டபுஸ்ஸி ஆனந்த்.!

சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…

2 hours ago

ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி..! வெளியான அறிவிப்பு!

சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…

2 hours ago

16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அலர்ட்!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…

2 hours ago

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

3 hours ago