ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை அணியும் மோதியது. இப்போட்டி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியில் தொடக்க வீரர் குவின்டன் டி காக் 33 ரன்னும், ரோகித் 12 ரன்களில் வெளியேறினர்.
பின்னர், திவாரி அதிரடியாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். திவாரி 42 ரன்கள் விளாசினார். மத்தியில் இறங்கிய க்ருனால் பாண்ட்யா 3 , பொல்லார்ட் 18 ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 162 ரன்கள் எடுத்தனர்.
163 இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் தொடக்க வீரர்களாக முரளி விஜய், ஷேன் வாட்சன் இருவரும் களமிறங்கினார். தொடக்க வீரர்கள் இருவருமே சொற்ப ரன்களில் வெளியேற பின்னர், டு பிளிஸ்சிஸ் அம்பத்தி ராயுடு களமிறங்கினார். நிதானமாக விளையாடி இருவரும் அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
அதிரடியாக விளையாடி வந்த அம்பத்தி ராயுடு நடப்பு தொடரில் தனது முதல் அரைசதத்தை நிறைவு செய்து 71 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து, ரவீந்திர ஜடேஜா களமிறங்கி 10 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். சிறப்பாக விளையாடி வந்த டு பிளிஸ்சிஸ் அரைசதம் நிறைவு செய்து 58* ரன் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார்.
கடைசியாக சென்னை அணி 19.2 ஓவரில் 5 விக்கெட்டை பறிகொடுத்து 166 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணியில் ட்ரெண்ட் போல்ட், ஜேம்ஸ் பேட்டின்சன், பும்ரா, க்ருனல் பாண்டியா மற்றும் ராகுல் சாஹர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை எடுத்தனர்.முதல் போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்து வெற்றிக்கணக்குடன் இத்தொடரை துவங்கியுள்ள சென்னையின் பயிற்சியாளர் முதல் போட்டி குறித்து தெரிவிக்கையில் ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானத்தில் விளையாடியது வீரர்களுக்கு வித்தியாசமான ஒரு உணர்வை அளித்தது, இருப்பினும் அவர்கள் சூழலை திறம்பட கையாண்டார்கள் என்று CSK அணியின் தலைமை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த சில நாட்களாக கோடைவெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று திடீரென சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து…
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 3)…
பெங்களூர் : நீங்க எமனாக மாறுவீர்கள் என்று நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை என சமூக வலைத்தளங்களில் சிராஜை பார்த்து ரசிகர்கள் பேசி…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை மற்றும்…