இன்றைய 29-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ஷேன் வாட்சன் – டு பிளெசிஸ் கூட்டணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல்முறையாக வாட்சனுக்கு பதிலாக சாம் கரண் களமிறங்கினார். ஆட்டம் தொடக்கத்திலே டு பிளெசிஸ் டக் அவுட் ஆனார். இதைத் தொடர்ந்து, ஷேன் வாட்சன் களமிறங்கினார்.
சிறப்பாக விளையாடி வந்த சாம் கரண் 31 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர், அம்பதி ராயுடு இறங்க வாட்சன் உடன் இணைந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். சிறப்பாக விளையாடி வந்த இருவரும் அரைசதம் அடிக்காமல் அம்பதி ராயுடு 41, வாட்சன் 42 ரன் எடுத்து வெளியேறினர். அடுத்து இறங்கிய தோனி 21 ரன்கள் எடுத்தார்.
இறுதியாக சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 167 ரன்கள் எடுத்தனர். ஹைதராபாத் அணி 168 ரன்கள் இலக்குடன் களமிறங்கவுள்ளது.
அமெரிக்கா : இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. ஏனென்றால், சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய…
சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் அண்மையில் பாஜக கூட்டணி அமைத்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய…
டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…
சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…