ரத்தாகிறத.!? ஐபிஎல் போட்டி..!முந்துக்கொண்டு பிசிசிஜ விளக்கம்

Default Image

இந்தியாவில் தனது அசுர பலத்தை நிருபிக்க வந்துள்ள கொரானா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டி ரத்தாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி நிலையில் இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சவுரவ் கங்குலி விளக்கம் தெரிவித்துள்ளார்.

சீனாவில் உருவான இந்த கொடூர கொரானா வைரஸ் ஆனது உலகம் முழுவதும் பரவியது மட்டுமல்லாமல் மக்களை அச்சுருத்தி கொன்று குவித்து வருகிறது.

இந்நிலையில்  இந்தியாவிலும் இது பரவியிருப்பதை தற்போது மத்திய அரசால்உறுதி செய்தயப்பட்டுள்ளது. இந்நிலையில் நடப்பாண்டிற்கான  ஐபிஎல் திருவிழாவை எதிர்கொண்டுள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஐபில் போட்டி ரத்தாகிறது என்ற தகவலால் கடும் அதிர்ச்சியாகினர்.

பரவிய தகவலால் பதட்டமடைந்த பிசிசிஐ இது குறித்து  அதன் தலைவர் கங்குலிடம் ஐபிஎல் முதல்போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் வரும் 29ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், வைரஸால் போட்டிக்கு பாதிப்பு ஏற்படுமா என்று கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர்  ஐபிஎல் போட்டிக்கோ, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடருக்கோ இதனால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பதிலளித்தார்.அதேபோல ஐபிஎல் நிர்வாக கவுன்சில் தலைவராக பதவிவகித்து வரு பிரிஜேஷ் படேலும், ஐபிஎல் போட்டிகள் எதுவும் ரத்தாகாது என்று தெளிவுப்பட  கூறினார்.எனவே குறித்த நாளில் ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்