சென்னை அதிரடி பந்து வீச்சு ஆட்டம்!
கிரிக்கெட் உலகின் திருவிழா போல கொண்டாடப்படும் ஐபிஎல் போட்டிகள் இன்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த இறுதிப்போட்டியில் ஐபிஎல்லில் பரம எதிரிகள் போல சித்தரிக்கப்படும் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுவதால் இதுவரை இல்லாத எதிர்பார்ப்பு ஐபிஎல் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் செய்ய முடிவெடுத்து விளையாடி வருகிறது.
மூன்று ஒவருக்கு 30/0 ரன்கள் எடுத்த நிலையில் டி காக் 20 ரன்னுடன் ரோகித் சர்மா 09 ரன்னுடன் கலத்தில் உள்ளனர். பந்து வீசிய தீபக் சாஹர் 20 ரன்களை விட்டு கொடுத்தார். 5 ஒவர் முடிவில் மும்பை ஒரு விக்கெட் இழப்புக்கு 45 ரன்களை எடுத்துள்ளது. 4-வது ஒவரை வீசிய சர்துல் தாகூர் எதிர்கொண்ட டி காக் – சிக்ஸ் அடித்துவிட்டு அடுத்த பந்தில் அவுட் ஆனார்.இதன் பின் பந்து வீசிய தீபக், ரோகித் சர்மா வை -15 ரன்னில் அவுட் ஆக்கினார். 45 ரன்னிற்கு 2 விக்கெட்டை பறிகொடுத்துள்ளது.