டோனி அவுட்..கண்ணீர் விட்டு அழுத சாக்ஷி யை கண்டு சோகத்தில் மூழ்கிய சென்னை ரசிகர்கள்
ஐபிஎல் 2019 சீசன் சிறப்பாக முடிந்துள்ளது.இந்த சீசனில் கோப்பையை மும்பை கை வசப்படுத்தியுள்ளது.
மும்பை மற்றும் சென்னை இரண்டுமே இறுதிப்போட்டியில் சரிக்கு சரியாக மோதியது.ரசிகர்களின் ஆரவாரத்திற்கு இடையே தரமான சம்பவமாக இறுதிப்போட்டி நடைபெற்று கொண்டிருந்தது.டாஸ் வென்ற மும்பை சென்னையை பந்து வீச அழைக்கவே களமிறங்கிய சென்னை பந்து வீச்சில் அனல் பறந்தது.மும்பை சற்றும் எதிர்பார்க்காத விதத்தில் பந்து வீச்சு இருந்தது.இறுதியில் 20 ஓவர் முடிவில் மும்பை 149 ரன் எடுத்து 150 ரன்களை சென்னைக்கு இலக்காக வைத்தது.
இதனால் இலக்கை விரட்ட களமிறங்கிய சென்னை தொடக்கம் நன்றாக அமைந்து கொண்டிருந்த வேளையில் மும்பை பக்கம் காற்று வீசவே சென்னை ஆட்டம் காண்டது.அந்த அணி வீரர்கள் சீரான வேகத்தில் அவுட் ஆகிய நிலையில் தோனி களமிறங்கினார்.அவர் இரண்டு ரன்னில் அவுட் ஆனார்.ஆனால் அவருடைய அவுட் சற்று கலக்கத்தை அனைவரிடத்திலும் தந்தது.
மேலும் தோனி அவுட் குறித்து முன்றாம் நடுவருக்கே சற்று கடினமாக தான் இருந்தது.அந்த நேரத்தில் தோனி அவுட் ஆக கூடாது என்று தோனியின் மனைவி சாக்ஷி கடவுளை வேண்ட மறுபக்கம் மும்பை அணிக்காக நீதா அம்பானி கடவுளை வேண்ட இப்படி இவர்களுடன் ரசிகர்களும் வேண்ட கடைசில் புளு சிக்னல் விழவே
தோனி வெளியேறினார்.இந்த அவுட்டை கண்டு அவருடைய மனைவி சாக்ஷியும் கண்ணீர் சிந்த இதை பார்த்த சென்னை ரசிகர்களும் தோனி அவுட் ஆனதை பெறும் ஏமாற்றத்துடன் சோகத்தில் மூழ்க்கினர்.