டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டனை காலி செய்த விசில் : 85/5 (14 ஓவர்)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியானது டெல்லிக்கு எதிரான 2வது தகுதிச்சுற்று போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கில் களமிறங்கிய டெல்லி அணியின் பிரித்விஷா 2வது ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார்.அதன் பின் இரண்டாம் விக்கெட்டை இழந்தது டெல்லி கேபிடல்ஸ்! சென்னை அணியின் ஹர்பஜன்சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் டெல்லி அணியின் தவான்
ரன் விவரம்: டெல்லி 46/2 (7.3 ஓவர்கள்) இதன் பின் டெல்லி கேப்பிட்டல்ஸ்: 57/2 (8 ஓவர்) கொலின் முன்றோ : 26 ஷ்ரேயாஸ் அய்யர் : 04 57/3 களத்தில் இருந்த நிலையில் கொலின் முன்றோவின் விக்கெட்டை விசில் வீரர் ஜடேஷா தட்டி தூக்கியுள்ளார்.இதன் பின்னர் ரிஷப் பந்த் களமிறங்கி உள்ளார்.
தற்போது டெல்லி டெல்லி கேப்பிட்டல்ஸ்: 74/3 (11 ஓவர்) ஷ்ரேயாஸ் அய்யர் : 13 ரிஷப் பந்த் : 09 ரன்கள் என்று விளையாடி வந்த நிலையில் கேப்டனின் விக்கெட்டை தட்டியது விசில் ,கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் அவுட்டாகினார் விசில் வீரர் இம்ரான் தாகிர் இந்நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் : 78/4 (12 ஓவர்) என்று சற்று ஆட்டம் கண்ட டெல்லி அணியின் அடுத்ததாக களமிறங்கிய அக்சார் பட்டேல் -02 மற்றும் ரிஷப் பந்த் ஜோடியை பிரித்து அக்சார் பட்டேலை அவுட் ஆக்கி உள்ளது சென்னை தற்போது ரிஷப் பந்த் 12,மற்றும் ரூதர்போர்டு : 00 களத்தில் உள்ளனர்.அதன்படி டெல்லி 85/5 (14 ஓவர்) முடிவில் விளையாடி வருகிறது.