“மிடில் ஆர்டர் என சொன்னால் அது யுவராஜ் சிங் தான்” ஜாகீர் கான் கருத்து
- டி20 ஆர்வத்தை ரசிகர்களிடையே கொண்டு வந்ததில் யுவராஜ் சிங் முக்கிய பங்கு வகிக்கிறார்
- எந்த ஒரு அணிக்கும் துவக்கம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு மிடில் வரிசையில் சிறந்த வீரர்கள் முக்கியம்.
ஒருகாலத்தில் டி20 என பெயர் எடுத்தால் அதில் நிச்சயம் யுவராஜ் சிங் என்பவர் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும். அந்த அளவிற்கு டி20 ஆர்வத்தை ரசிகர்களிடையே கொண்டு வந்ததில் யுவராஜ் சிங் முக்கிய பங்கு வகிக்கிறார்.
இந்திய அணியில் தொடர்ந்து இடம்பெறாவிட்டாலும் இன்றளவும் இவருக்கு என்று ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
2007ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இவர் அடித்த 6 சிக்சர்கள் இன்றளவும் மனதை விட்டு நீங்காது.
இந்நிலையில், அண்மையில் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். இவர் எடுக்கப்பட்டதன் காரணத்தை இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் மற்றும் மும்பை அணியின் ஆலோசகராக ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, “எந்த ஒரு அணிக்கும் துவக்கம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு மிடில் வரிசையில் சிறந்த வீரர்கள் முக்கியம். இந்தியாவில் மிடில் வரிசையில் சிறந்த வீரர் என்றால் அது யுவராஜ் சிங் தான். இவர் அளவிற்கு அனுபவம் கொண்ட வீரர்கள் எவரும் இல்லை. அதனால், இவரை அணியில் எடுத்தோம்” என்றார்.