ஐபிஎல் இது கிரிக்கெட்டின் புல்லட் ரயில் போன்றது, இது போகிற வேகமட்டுமில்ல இங்க விளையாடுகிற வீரர்களின் திறமையும் சற்று வேகம் கூடதான்.கடந்த மார்ச் மாதம் 23இல் ஆரம்பித்து 12வது ஐபில் அதன் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இன்று சென்னை மற்றும் மும்பை அணி முதல் தகுதி சுற்றில் மோதுகிறது. இதில் வெற்றி பெரும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்லும்,இதில் தோல்வி அடையும் அணி 2வது தகுதி சுற்றில் வெற்றி பெரும் அணியுடன் மோதி இறுதிப்போட்டிக்கு செல்லவேண்டும்.
இந்த ஐபிஎல்லில் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்குகிடையே நடந்த இரண்டு போட்டிகளிலும் மும்பை அணி வெற்றி பெற்றது.இதில் தோனி மும்பையில் நடந்த போட்டியில் மட்டும் களமிறங்கினார் .சென்னையில் நடந்த இரண்டாவது போட்டியில் களமிறங்கவில்லை. இதில் தோல்வியை தழுவியது சென்னை அணி. இன்று நடைபெறும் போட்டியில் தோனி தலைமையிலான படை களமிறங்க உள்ளதால் ரசிகர்களிடேயே மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சென்னை நடப்பு சாம்பியன் என்பதால் மீண்டும் இறுதிப்போட்டிக்கு சென்று கோப்பையை வெல்லும் முனைப்புடன் உள்ளது. இப்போட்டி சென்னையில் நடைபெறவுள்ளதால் கூடுதல் உத்வேகத்தை தரும் தோனி படைக்கு.
இதுவரைக்கும் நடந்த ஐபிஎல் போட்டிகளில் சென்னை மற்றும் மும்பை அணிகள் 28 முறை சந்தித்துள்ளது இதில் சென்னை அணி 12 முறையும் மும்பை 16 அணி முறையும் வெற்றிபெற்றுள்ளது .நாம் இதில் பார்க்க வேண்டிய முக்கியமான செய்தி என்னவென்றால் சென்னையில் வைத்து 7 போட்டிகள் நடைபெற்றுள்ளது இதில் மும்பை 5 போட்டிகளிலும் 2ல் சென்னையும் வெற்றி பெற்றுள்ளது .அப்போ என்ன நா சொல்றது இன்னைக்கு உங்களுக்கு நல்ல விருந்ததுதான ரசிகர்களே.
இப்போட்டியில் யார் வெற்றிபெருவாங்க என்ன காரணம் உங்க கருத்தை சொல்லுங்க பார்ப்போம்.இதுபோன்ற ஐபில் செய்திகள் உடக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் தினச்சுவடு உடன்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…