பயிற்சியில் அசத்திய வார்னர்!! அரண்டுபோன மற்ற அணியினர்!!
- ஒருவருட தடைக்கலாம் முடியும் தருவாயில் இருப்பதால், தற்போது ஐபிஎல் போட்டியில் ஆடுவதற்கு ஓகே சொல்லியுள்ளது ஐபிஎல் மற்றும் பிசிசிஐ நிர்வாகம்.
- பங்களாதேஷ் லீக் போட்டியில் காயம் ஏற்பட்டு வெளியேறினார். அதன் பின் சிகிச்சை முடிந்து தற்போது தான் மீண்டும் ஆடுகிறார்
ஒருவருட தடைக்கலாம் முடியும் தருவாயில் இருப்பதால், தற்போது ஐபிஎல் போட்டியில் ஆடுவதற்கு ஓகே சொல்லியுள்ளது ஐபிஎல் மற்றும் பிசிசிஐ நிர்வாகம். இதனால் வார்னர் மற்றும் ஸ்மித் இருவரும் அவர்களது ஐபிஎல் அணியில் இணைந்துள்ளனர்.
இதனால், நேற்று காலை ஹைதராபாத் வந்து இறங்கியவுடன் பயிற்சியில் ஆட்டத்தில் ஈடுபட்டார் வார்னர். சன் ரைசர்ஸ் ஏ மற்றும் பி அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய வார்னர், அரைசதம் அடித்து ஆச்சர்யப்படுத்தினார்.
காரணம், பங்களாதேஷ் லீக் போட்டியில் காயம் ஏற்பட்டு வெளியேறினார். அதன் பின் சிகிச்சை முடிந்து தற்போது தான் மீண்டும் ஆடுகிறார். இந்த போட்டியில் 43 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். அவரது அணி 211 ரன்களை குவித்தது.
காயத்தில் இருக்கும்போதே இந்த அதிரடியா?? என மற்ற அணி வீரர்கள் மிரண்டுபோய் உள்ளனர்.