டெல்லி-ராஜஸ்தான் அணிகள் மோதல்! புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு செல்லுமா டெல்லி அணி?
2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும் 53-வது ஐபில் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெறுகிறது.
டெல்லி அணி ஏற்கனவே ஃபிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது.டெல்லி அணி 13 போட்டிகளில் விளையாடி உள்ளது.இதில் 8 வெற்றி,5 தோல்விகள் ஆகும்.8 வெற்றிகள் பெற்றதன் மூலம் 16 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.
ஆனால் ராஜஸ்தான் அணியை பொருத்தவரை அந்த பிளே ஆஃப் சுற்றில் விளையாடும் வாய்ப்பை இழந்து விட்டது.ராஜஸ்தான் அணி 13 போட்டிகளில் விளையாடி உள்ளது.இதில் 5 வெற்றி,7 தோல்விகள் மற்றும் ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது.11 புள்ளிகளுடன் ராஜஸ்தான் அணி 6-வது இடத்தில் உள்ளது.
இன்றைய போட்டியில் டெல்லி அணி வெற்றிபெறும் பட்சத்தில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும். ஆனால் ராஜஸ்தான் அணியை பொருத்தவரை வெற்றிபெற்றாலும் பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பு கிடைக்காது.