இன்று சென்னை-பஞ்சாப் அணிகள் மோதல்! வெற்றிபெறப்போவது சென்னை தோனியா ,பஞ்சாப் அஷ்வினா

Default Image

இன்றைய ஐபில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றது

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும்  18-வது ஐபில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்   அணி-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ்   அணியை பொருத்தவரை இந்த அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி இருந்துவருகிறார்.நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்  அணிதான்.இதுவரை சென்னை அணி 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி ,1 தோல்வியுடன் 6 புள்ளிகளுடன் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.கடைசியாக மும்பையுடன் விளையாடிய போட்டியில் சென்னை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.இதற்கு முக்கிய காரணம் சென்னை அணியின் தொடக்க வீரர்கள் ரன் குவிக்க தவறினார்கள்.பின்னர் வந்தவர்களும் சரியாக விளையாடவில்லை.ஆனால் சென்னை அணியின்  தொடக்க வீரர்கள் விளையாடிய 4 போட்டிகளிலும் சரியாக ரன் குவிக்கவில்லை.

அதேபோல் சென்னை அணியின் நட்சத்திர வீரர் பிராவோவிற்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஆடிய போது தொடையில் பிடிப்பு ஏற்பட்டுள்ளது.மேலும் இந்த காயம் காரணமாக இரண்டு வாரங்கள் அவர் ஓய்வு எடுக்க வேண்டும் எனவும் சென்னை அணியின் மருத்துவர் குழு அறிவித்துள்ளது. இது சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக காணப்படுகிறது.இவர் இவரது இழப்பை சென்னை அணி எவ்வாறு ஈடு செய்யப் போகிறது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

அதேபோல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எடுத்துக்கொண்டால் அஸ்வினின் செய்த மன்கட் விக்கெட் பெரும் சர்சையை ஏற்படுத்தியது.இருந்தாலும் இந்த ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது.அதேபோல் இரண்டாவதாக கொல்கத்தா அணியுடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அணி மோதியது.இந்த ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.அதேபோல் மும்பை அணியுடன் 8 விக்கெட் வித்தியாசத்திலும்,டெல்லி அணியுடன் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.பஞ்சாப் அணியை பொருத்தவரை அந்த பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பலமாகவே உள்ளது.ஆனால் பஞ்சாப் அணி கேப்டன்  அஸ்வின் சென்னை சேர்த்தவர் என்பதாலும் சென்னை அணியின் கேப்டன் தோனி என்பதாலும் இந்த போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்