தல தோனியின் பல்வேறு சாதனைகள் ..!
மேலும் அவர் கேப்டனாக பதவியேற்ற பின்னர் இந்திய டெஸ்ட் அணி தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது. அதே போல் டி20, 50ஓவர், மினி உலகக் கோப்பை என மூன்று விதமான உலகக் கோப்பைகளை வென்று கொடுத்து இந்திய உலகப் புகழ் பெற வைத்தார்.
அதே போல் ஐபிஎல் போட்டிகளிலும் தொடர்ந்து 2முறை சாம்பியன் கோப்பை வென்றதோடு, 2 வருட தடைக்கு பின்னர் மீண்டும் விளையாட வந்த சென்னை அணிக்கு மூன்றாவது முறையாக கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.
தல தோனி தலைமையில் இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்ற பட்டியலை பார்ப்போம்.
2007 -ம் ஆண்டு – டி20 உலகக் கோப்பை
2010 -ம் ஆண்டு – ஐபிஎல் (சென்னை அணி)
2010 -ம் ஆண்டு – சாம்பியன்ஸ் லீக் கோப்பை (முக்கிய கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் இருந்து சிறந்த உள்நாட்டு அணிகள் பங்கேற்கு போட்டித் தொடர்)
2011 -ம் ஆண்டு – ஐபிஎல் (சென்னை அணி)
2011 -ம் ஆண்டு – உலக கோப்பை
2013 -ம் ஆண்டு – சாம்பியன்ஸ் டிராபி (மினி உலக கோப்பை)
2014 -ம் ஆண்டு – சாம்பியன்ஸ் லீக் கோப்பை
2018 -ம் ஆண்டு – ஐபிஎல் (சென்னை அணி)