12 வது ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் 23-ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் உள்ள அனைத்து லீக் சுற்றுகள் முடித்த நிலையில் கடந்த 7-ம் தேதி முதல் தகுதிச்சுற்று போட்டி நடைபெற்றது .
இப்போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் மோதியது. அப்போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி நேரடியாக இறுதி சுற்றுக்கு தகுதியை பெற்றது.
இந்நிலையில் இன்று இரண்டாவது தகுதிச்சுற்று போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோதுகிறது.இந்த போட்டியானது விசாகப்பட்டினத்தில் உள்ள ஏசிஏ-விசிடிசிஏ மைதானத்தில் இன்று இரவு 07.30 மணிக்கு நடைபெற உள்ளது.
டெல்லி அணியை பொறுத்தவரை இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வருகிறது. டெல்லி அணி இளம் வீரர்களை வைத்திருந்தாலும் வெற்றி பெற்று தான் வருகிறது. ஆனால் இந்த ஐபிஎல் சீசனை பொருத்தவரை டெல்லி அணி , சென்னை அணியுடன் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியை பொறுத்தவரை இதுவரை ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டிக்கு சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதும் வாய்ப்பைபெறும்.
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…
சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
ஹைதராபாத்: இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய்…
டெல்லி: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகம்மது கான், பீகாருக்கு…
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…