Shubman Gill [Image Source : Twitter/@GT]
ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அதுல் வாசன் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2023 தொடர் ஒருவழியாக இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. லீக் சுற்று மற்றும் பிளேஆப் சுற்று போட்டிகள் முடிவடைந்து இறுதி சுற்று போட்டி இன்று நடைபெறுகிறது. இன்று நடைபெறும் இறுதி போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதுகிறது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த இறுதிப் போட்டிக்கு முன்னதாக, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அதுல் வாசன், குஜராத் அணியின் தொடக்க வீரர் ஷுப்மான் கில்லை பாராட்டியுள்ளார். இந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா அணியை சுப்மன் கில் அணிகளை வெற்றியை தொடர்ந்து கில்லின் அடுத்த இலக்கு தோனியின் சென்னை அணி தான் என்று கூறியுள்ளார்.
இந்த ஐபிஎல் தொடரில் சுப்மன் கில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு எதிராக விளையாடிய இரண்டு போட்டிகளில் சதங்கள் அடித்து வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில், இந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா அணியை சுப்மன் கில் சதமடித்து வெற்றி பெற்றது போல் இன்றைய போட்டியில் தோனியையும் வெல்வார் போல் தோன்றுகிறது என இந்திய அணியின் முன்னாள் வீரர் அதுல் வாசன் தனது கருத்தை முன் வைத்துள்ளார்.
நடப்பு சீசனில் கில் அடித்த 851 ரன்களில், 533 ரன்கள் அகமதாபாத்தில் நடந்து முடிந்த எட்டு போட்டிகளில் எடுத்தது. அதில் அவர் அடித்த மூன்று அரைசதங்கள் மற்றும் இரண்டு சதங்கள் அடங்கும்.
மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே, 'மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறைவோம்' என்று…
தூத்துக்குடி : திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி தனது தூத்துக்குடி மக்களவை தொகுதி சார்ந்து முக்கிய அறிவிப்பு…
மதுரை : சமீப நாட்களாகவே அதிமுக உட்கட்சி விவகாரம் பொதுவெளியில் விவாதிக்கப்படும் அளவுக்கு அக்கட்சியினரின் செயல்பாடுகள் அனைவராலும் உற்றுநோக்கப்படுகிறது. முதலில்…
சென்னை : நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதை…
சென்னை : பவர் ஸ்டார் சீனிவாசன், சினிமாவில் ஒரு காலத்தில் மிகவும் விரும்பப்படும் காமெடியானாக இருந்வர். தனது நடிப்பால் அல்ல,…
சென்னை : ஐபிஎல் தொடரில், நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில், ராஜஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ்…