ரகானே கேப்டன் பதவி பறிபோனது!புதிய கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமனம்
இந்தவருடம் இனிவரும் ஐபிஎல் போட்டிகளில் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்படுவார் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியதால், ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஒரு ஆண்டு காலம் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதில், ஸ்டீவ் ஸ்மித் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், டேவிட் வார்னர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கும் கேப்டன்களாக இருந்து வந்தனர். இதன்காரணமாக அவர்களுக்கு பதிலாக இரு அணிகளுக்கும் புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டனர். இதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரஹானேவும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு கேன் வில்லியம்சனும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் இவர்களின் தடைகாலம் முடிவடைந்தது. இம்முறை இவர்கள் இருவரும் ஐபிஎல் போட்டியில் ஆடி வருகின்றனர்.
ஆனால் இந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடுமையாக சொதப்பி வருகிறது.8 போட்டிகளில் விளையாடிய அந்த அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் இந்தவருடம் இனிவரும் ஐபிஎல் போட்டிகளில் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.