RRVMI : மும்பை அணி 161 ரன்கள் குவிப்பு !டி காக் அசத்தல் பேட்டிங் !சொதப்பிய மிடில் ஆர்டர்
இன்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை அணி 161 ரன்கள் அடித்துள்ளது.
இன்று நடைபெற்றுவரும் 36-வது ஐபில் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றது .இந்த போட்டியானது, ராஜஸ்தானில் உள்ள சவாய் மான் சிங்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் அடித்துள்ளது. குவின்டன் டி காக் 65,சூர்யகுமார் 34 ரன்கள் எடுத்தனர்.ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சில் ஸ்ரேயாஸ்கோபால் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் பின்னர் 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இலக்குடன் களமிறங்க உள்ளது.