ராஜஸ்தான் vs பஞ்சாப்: வெல்லப்போவது யார்?
இந்தாண்டு ஐபிஎல் தொடரின் 4வது போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் இரு அணிகளும் மோதுகின்றன.
ராஜஸ்தான் தனது சொந்த மைதானத்தில் வெற்றியுடன் துவங்க முயற்சிக்கும். அதற்க்கு பலம் சேர்க்கும் வகையில் ஸ்மித் இம்முறை அணியில் இணைந்துள்ளார்.
மேலும், பஞ்சாப் அணியில் கே எல் ராகுல் நல்ல நிலையில் உள்ளார். அதை இந்த ஐபிஎல் தொடரிலும் வெளிப்படுத்த காத்திருக்கிறார்.
நேருக்கு நேர்:
போட்டிகள் – 17
ராஜஸ்தான் – 10
பஞ்சாப் – 7
ஜெய்ப்பூர் மைதானம்:
இந்த மைதானத்தில் நடைபெற்ற 40 போட்டிகளில் ராஜஸ்தான் 29 முறை வென்றுள்ளது. 11 முறை தோல்வியை தழுவியுள்ளது.
இந்த மைதானத்தில் பஞ்சாப் அணி இதுவரை வென்றதில்லை.
கணிப்பு:
இம்முறையும் ராஜஸ்தான் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.