தனக்கும் கங்குலிக்கும் இடையே உள்ள நட்பை விவரிக்கிறார்.. ரிக்கி பாண்டிங்

Default Image
  • டெல்லி அணி இதுவரை கோப்பையை வென்றதில்லை. அதனால் நிர்வாகம் பல மாற்றங்களை கொண்டு வருகிறது.
  • இந்த ஆண்டு, டெல்லி அணியின் ஆலோசகராக கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும்,  ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனும் எப்படி நட்பில் உள்ளார் கள் என்பதை விவரிக்கிறார் ரிக்கி பாண்டிங்.

ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டு டெல்லி அணிக்காக ரிக்கி பாண்டிங் பயிற்சியாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். இந்த ஆண்டு, டெல்லி அணியின் ஆலோசகராக கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இருவரின் நட்பு குறித்தும், அணிக்கு உதவுவது குறித்தும் பாண்டிங் கூறுகிறார்.

அவர் கூறியதாவது, “டெல்லி அணி இதுவரை கோப்பையை வென்றதில்லை. அதனால் நிர்வாகம் பல மாற்றங்களை கொண்டு வருகிறது. அதில் ஒன்று கங்குலி ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அவரும் நானும் நீண்டகாலமாக நட்பில் உள்ளோம். அவரின் அனுபவம் டெல்லி போன்ற இளம் வீரர்கள் கொண்ட அணிக்கு நிச்சயம் ஏதுவாக இருக்கும். உத்வேகத்தை கொடுக்கும்” என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்