14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பஞ்சாப் அணி..
ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டியில், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.
முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தொடர்ந்தது.
துவக்க வீரர்களாக ராகுல் மற்றும் கெயில் இருவரும் கலமிறங்கினார்கள். ராகுல் 4 ரன்களில் வெளியேறினார்.
அதிரடியாக ஆடிய கெயில் 79 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டறிகளும் 4 சிக்ஸரும் அடங்கும். மயங்க் அகர்வால் 22 மற்றும் நிக்கோலஸ் பூரன் 12 ரன்களுக்கு எடுத்து ஆட்டமிழந்தனர்.
சிறப்பாக ஆடிய சர்ப்பிரஸ் அஹ்மது 29 பந்துகளில் 46 ரன்கள் அடித்து அசத்தினார். 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது பஞ்சாப் அணி.
ராஜஸ்தான் சார்பில் ஸ்டோக்ஸ் 2 விக்கெடுகளையும், குல்கர்னி மற்றும் கௌதம் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
185 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்க களமிறங்கியது ராஜஸ்தான் அணி.
பட்லர் மற்றும் ரஹானே இருவரும் அதிரடி துவக்கத்தை கொடுத்தனர். ரஹானே 27 ரன்களுக்கு வெளியேறினார். அதிரடியாக ஆடி வந்த பட்லர் சர்ச்சைக்குரிய முறையில் வெளியேறினார். இவர் 69 ரன்கள் அடித்திருந்தார். இவர் 2 சிக்ஸர் மற்றும் 10 பவுண்டரிகள் அடித்திருந்தார்.
அதன்பிறகு எவரும் நிலைத்திருக்கவில்லை. அடுத்தடுத்து விக்கெட் ஆகி வெளியேற 20 ஓவர்கள் முடிவில் ஆட்டம் பஞ்சாப் வசம் சென்றது.
ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் மட்டுமே எடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.