வெளியேறியது கொல்கத்தா அணி ! சென்னை அணியை எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ்
இன்று நடைபெற்ற 56-வது ஐபில் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது.
இந்த போட்டியானது, மும்பையில் உள்ள வாங்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 133 ரன்கள் எடுத்தது.கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அதிகபட்சமாக லின் 41,உத்தப்பா 40 ரன்கள் அடித்தனர்.
134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது .
இறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணி 16.1 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 134 ரன்கள் அடித்தது.இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக ரோகித் 55*,சூர்யா குமார் 46 *ரன்கள் அடித்தனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா 1 விக்கெட் வீழ்த்தினார்.
இதன் மூலம் சென்னை அணியை வரும் செவ்வாய் கிழமை குவாலிபயர் போட்டியில் மும்பை அணி எதிர்கொள்கிறது.அதேபோல் கொல்கத்தா அணி தோல்வி பெற்றதால் ஹைதராபாத் அணி பிளே ஆ ஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.இதனால் ஹைதராபாத் அணி புதன்கிழமை எலிமனேட்டர் சுற்றில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது.