சூப்பர் ஓவரில் எளிதாக ஹைதராபாத்தை வீழ்த்திய மும்பை அணி! மனிஷ் பாண்டேவின் அதிரடி வீண்!

Default Image

ஐபிஎல் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கெய்ன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைஸர்ஸ் ஹைதிராபாத் அணியும் மும்பை மைதானத்தில் மோதின.

இந்த போட்டியில் டாஸ் ஜெயித்த மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்து தனது நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது. இதில் குவிண்டம் டீ காக் அதிகபட்சமாக 69 ரன்களும், கேப்டன் ரோஹித் சர்மா 24 ரன்களும் , சூரியகுமார் யாதவ் 23 ரன்களும் அடித்து மும்பை அணி 20 ஓவரில் , 5 விக்கெட்டை இழந்து, 162 ரன்கள் எடுத்துள்ளது.

163 ரன்கள் அடித்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய ஹைதிராபாத் அணியில் சஹா 25 ரன்களும், மார்ட்டின் குப்தில் 15 ரன்களும் , கேன் வில்லியம்சன் (சி) 3 ரன்களும், , விஜய் ஷங்கர் 12 ரன்களும், அபிஷேக் ஷர்மா 2 ரன்களும், முகம்மது நபி 31 ரன்களும் அடித்து அதிமுகப்பட்சமாக மணீஷ் பாண்டே 71 ரன்கள் அடித்து கடைசி வரை காலத்தில் நின்று ஆட்டத்தை கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து 162 ரன்கள் அடித்து சமனில் முடிந்தது.

இதனை தொடர்ந்து நடந்த சூப்பர் ஓவரில் முதலில் களமிறங்கிய ஹைதிராபாத் அணியில் மனிஷ் பாண்டியா, முஹம்மது நபி ஆகியோர் களமிறங்கி 6 பந்தில் 8 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.  மும்பை அணியின் சார்பாக சூப்பர் ஓவரை பும்ப்ரா வீசினார்.

அதற்கடுத்து ஹைதிராபாத் அணியின் சார்பாக ரஷீத் கான் பந்துவீச, ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட் களமிறங்கி அணியை வெற்றிபெற வைத்தனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்