ஹைதிராபாத் அணிக்கு எதிராக நிதானமாக ஆடி 163 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது மும்பை அணி!
ஐபிஎல் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கெய்ன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைஸர்ஸ் ஹைதிராபாத் அணியும் மும்பை மைதானத்தில் மோதுகின்றன.
இந்த போட்டியில் டாஸ் ஜெயித்த மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்து தனது நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியுள்ளது. இதில் குவிண்டம் டீ காக் அதிகபட்சமாக 69 ரன்களும், கேப்டன் ரோஹித் சர்மா 24 ரன்களும் , சூரியகுமார் யாதவ் 23 ரன்களும் அடித்து மும்பை அணி 20 ஓவரில், 5 விக்கெட்டை இழந்து, 162 ரன்கள் எடுத்துள்ளது. 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்கிற இலக்குடன் தற்போது ஹைதிராபாத் அணி ஆடி வருகிறது.