CSKVMI : மும்பை அணி 155 ரன்கள் !ரோகித் சர்மா அரை சதம்
2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும் 44-வது ஐபில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி சென்னையில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ரெய்னா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதன் பின் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் அடித்துள்ளது.ரோகித் சர்மா 67 ரன், லூயிஸ் 32 ரன்கள் எடுத்தனர். இதன் பின்னர் 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இலக்குடன் களமிறங்க உள்ளது.