KXIPVSRH:பேட்டிங்கில் சொதப்பிய ஹைதராபாத் அணி! பஞ்சாப் அணி 151 ரன்கள் அடித்தால் வெற்றி!
இன்றைய ஐபில் போட்டியில் 151 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி களமிறங்கவுள்ளது.
2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும் 22-வது ஐபில் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி-சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி மொகாலியில் உள்ள பிந்த்ரா மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதன் பின்னர் களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆரம்பத்திலே விக்கெட்டை பறிகொடுத்தது.சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் வார்னர் மட்டும் ஓரளவு தாக்கு பிடித்து ஆடினார்.மற்றவர்கள் யாரும் சரியாக விளையாடவில்லை.
இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டை இழந்து 150 ரன்கள் மட்டுமே அடித்தது.சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக வார்னர் 70* ரன்கள் அடித்தார்.கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பந்து வீச்சில் அஸ்வின்,சமி,முஜீப் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.
இதன் பின்னர் 151 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி களமிறங்கவுள்ளது.