ஐபிஎல் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியும், கொல்கத்தா அணியும் பஞ்சாபில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியில் நிகோலஸ் பூரான் 48 ரன்களும், அகர்வால் 36 ரன்களும் , மந்தீப் சிங் 25 ரங்களும் அடித்திருந்தனர். கெய்ல் 14 ரன்களிலே வெளியேறினார். அதிகபட்சமாக சாம் குரான் சிறப்பாக ஆடி 55 ரன்கள் விளாசினார். இதன் மூலம் 20 ஓவரில் பஞ்சாப் அணி 183 ரன்கள் அடித்தனர்.
184 ரன்கள் அடித்தால் வெற்றி என்கிற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.ஆரம்ப முதலே கொல்கத்தா அணி அதிரடியாக விளையாடியது.அதிரடியாக விளையாடிய லின் 46 ரன்களில் வெளியேறினார்.பின் உத்தப்பா 22 மற்றும் ரசல் 24 ரன்களில் வெளியேறினார்கள்.
இறுதியாக கொல்கத்தா அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 185 ரன்கள் மட்டும் அடித்தது.கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக கில் 65 ரன்கள் அடித்தார்.பஞ்சாப் அணியின் பந்துவீச்சில் அஸ்வின்,சமி ,டை தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.இதன் மூலம் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…