பெங்களூரு அணிக்காக ஆடுவது தான் எனக்கு மகிழ்ச்சி.. கேப்டன் கோஹ்லி
- இரண்டும் ஒருசேர வந்தால் ஒட்டுமொத்த இந்தியாவும் கையில் பிடிக்க முடியாதது போல ஓட்டம் எடுக்கும்
- நான் பெங்களூர் அணிக்காக ஒவ்வொரு முறை களம் இறங்கும் போதும் கூடுதல் மகிழ்ச்சியுடன் இருப்பேன்.
ஒட்டுமொத்த இந்தியாவையும் பரபரப்பாக வைத்திருப்பது இரண்டு விஷயம் தான். ஒன்று தேர்தல் மற்றொன்று ஐபிஎல்.
இதில் இரண்டும் ஒருசேர வந்தால் ஒட்டுமொத்த இந்தியாவும் கையில் பிடிக்க முடியாதது போல ஓட்டம் எடுக்கும். அப்படித்தான் இந்த ஆண்டும் இருக்கப் போகிறது. காரணம் இரண்டும் ஒன்றாக வரப்போகிறது.
ஆஸ்திரேலியா தொடரை கொடுத்துவிட்டு வீரர்கள் அந்தந்த ஐபிஎல் அணி நோக்கி படையெடுக்க தொடங்கி விட்டனர்.
இந்நிலையில் நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் கயிற்றில் இணைந்து அந்த அணியின் கேப்டன் கோஹ்லி கூறியதாவது, “நான் பெங்களூர் அணிக்காக ஒவ்வொரு முறை களம் இறங்கும் போதும் கூடுதல் மகிழ்ச்சியுடன் இருப்பேன். காரணம் வெவ்வேறு நாட்டு வீரர்களுடன் ஒரே அணியில் ஆடுவது ஒரு இனம் புரியாத சந்தோசத்தை கொடுக்கும். நிறைய கற்றுக் கொள்ள வழி வகுக்கும்” என தெரிவித்தார்