ஆல்ரவுண்டர்களை வைத்து கொல்கத்தாவை பந்தாடிய ராஜஸ்தான்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையேயான போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் அபார ஆட்டத்தால் கொல்கத்தா அணி முதல் இன்னிங்சில் 175 ரன்கள் குவித்திருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கொல்கத்தாவை முதலில் பேட்டிங் செய்தது.
கொல்கத்தா அணியின் முதல் மூன்று வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அதன் பின்னர் வந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் ஆட்டத்தை கையில் எடுத்தார். அற்புதமாக ஆடி அவர் தன்னந்தனியாகப் போராடிக் 50 பந்துகளில் 97 ரன்கள் குவித்தார். இதில் 7 தொண்டர்களும் 9 சிக்சர்களும் அடங்கும். இறுதியாக 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது கொல்கத்தா அணி.
அதன் பிறகு களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான ரஹானே 34 ரன்களும் , சிம்மன்சன் 22 ரன்களும் அடித்து வெளியேற கேப்டன் ஸ்மித் 2 ரன்னில் ஆட்டமிழக்க ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். அதன் பிறகு பெண் ஸ்டோக்ஸ் 11 ரன்னில் அவுட் ஆக, ரியான் பராக் 47 ரன்கள் எடுத்திருந்தார். ஸ்டூவர்ட் பின்னி 11 ரன்களும் , ஷ்ரேயஸ் கோபால் 18 ரன்களும் , இறுதியாக களமிறங்கிய ஆர்ச்சர் 27 ரன்களை விளாசி ராஜஸ்தான் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.