ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நாளை மாலை 4 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது.
2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் இரு அணிகளும் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சென்னை அணியிடம் கோப்பையை தவற விட்டது. கொல்கத்தா அணி மூன்றாவது இடத்தை பிடித்தது.
கொல்கத்தா அணியின் பலம்
டாப் ஆர்டரில் கிறிஸ் லின், சுனில் நரேன், ராபின் உத்தப்பா ஆகியோர் பவர் பிளேவில் எதிரணி பந்துவீச்சை துவம்சம் செய்துள்ளனர். குறிப்பாக சுன்னி நரேன் துவக்க வீரராக களமிறங்கி 220 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.
ஹைதராபாத் அணியின் பலம்
ஹைதராபாத் அணிக்கு வார்னர் திரும்பியுள்ளார், அதேபோல காயத்தில் இருந்து கேன் வில்லியம்சன் மீண்டு வந்தது கூடுதல் பலம் அளிக்கும். விஜய் சங்கர் அணியில் இணைந்துள்ளார். இதனால் மிடில் ஆர்டர் அதிக பலம் பெரும்.
இரு அணிகளும் இறுதியாக மோதிய 8 போட்டிகளில் தலா 4 முறை வென்றுள்ளன.
குறிப்பாக, ஈடன் கார்டன் மைதானத்தில், 7 முறை இரு அணிகளும் மோதியதில், கொல்கத்தா 5 முறையும் ஹைட்ரபாத் 2 முறையும் வென்றுள்ளது.
இரு அணிகளுக்கு இடையே, முதலில் பேட்டிங் செய்துள்ள அணி 5 முறை வென்றுள்ளது. இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி 2 முறை வென்றுள்ளது.
ஆதலால், டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்யும் அணி வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளன.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…