ஐபிஎல் திருவிழா இரண்டு மாதங்களாக செம ஜோராக நடைபெற்று தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த போட்டியில் ஆரம்பத்தில் தடுமாறி இரண்டாவது பாதியில் மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து முதல் இடத்தை பிடித்து, சென்னை அணியை மூன்று முறை அடித்து நொறுக்கி (முதல் தகுதி சுற்று உட்பட ) நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.அதேபோல ஆரம்பத்தில் இருந்து முதல் இரண்டு இடத்தை விட்டு கிழே இறங்காமல் நன்றாக விளையாடி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது தகுதி சுற்றில் கத்துக்குட்டி டெல்லியை வென்று தற்போது மும்பை அணியுடன் மோத தயாராகி விட்டது.ஐபிஎல் போட்டியில் நாம் எந்த அளவிற்கு பார்த்து சந்தோசப்படுகிறோமோ, அதேபோல், வெற்றி வாகை சூடும் டீம் முதல் நன்றாக ஒரு கேட்ச் பிடித்த சக வீரருக்கு கிரௌண்டிற்கு கூட பரிசுமழை கொட்டுகிறது. இதில், யார் யாருக்கு பரிசு கொடுக்க படுகிறது, என கொஞ்சம் விரிவாக பாப்போம்பிளே ஆப் சுற்றை தவிர்த்து மற்ற தகுதி சுற்றுகளில் (இறுதி போட்டி உட்பட) வீரருக்கு 5 லட்சம் ருபாய் கொடுக்கப்பட உள்ளது. சிறந்த கேட்ச்சிற்க்கு 1 லட்சம் ருபாய், அதிக சிக்ஸ் அடித்த வீரருக்கு 1 லட்சம், ருபாய் கொடுக்கப்படுகிறது.அதேபோல 7 மேட்ச்சிற்கு அதிகமான மேட்ச் விளையாண்ட மைதானத்திற்கு 50 லட்சம் கொடுக்கப்பட உள்ளது. அதே போல, 7 போட்டிக்கு குறைவாகவும் இறுதிப்போட்டி நடக்கும் மைதானத்துக்கு 25 லட்சம் ருபாய் கொடுக்கப்படுகிறது.இந்த சீசனில் மொத்த போட்டியையும் வைத்து கொடுக்கப்படும் பரிசு விவரங்கள், இந்த சீசனில் பிடிக்கப்பட்ட சூப்பர் கேட்ச் பிடித்த வீரருக்கு 10 லட்சமும், விரைவாக 50 ரன்கள் அடித்த வீரருக்கு 10 லட்சமும், இந்த சீசனில் ஸ்டைலாக விளையாடிய வீரருக்கு (விளையாட்டு திறன், தோற்றம், நடவடிக்கை, இதனை பார்த்து கொடுக்கப்படுகிறது) 10 லட்சமும், கிளாமரஸ் ஷாட் அடித்த வீரருக்கு 10 லட்சம் ருபாய் கொடுக்கப்பட உள்ளது.முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு தரும் பரிசுத்தொகை விவரம்., முதல் பரிசு 28 கோடி, இரண்டாவது பரிசு 14 கோடி ரூபாயையும், மூன்றாது பரிசாக 9 கோடி ரூபாயும் கொடுக்கப்ட உள்ளது. இந்த பரிசு தொகை தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மேட்ச் முடிவில் இதில் மாற்றங்கள் வரலாம்.
DINASUVADU
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…