ஐபிஎல் முதல் போட்டியில் இந்திய ராணுவத்திற்கு மரியாதை செலுத்தும் பிசிசிஐ!! ரசிகர்கள் சபாஷ்…!!
- ராணுவ நிதிக்கு கொடுக்க 20 கோடியை பிசிசிஐ ஒதுக்கியது
- ஐபிஎல் தொடரின் துவக்க விழாவில், தோனி மற்றும் கோஹ்லி இருவரும் ஒதுக்கப்பட்ட தொகையை ராணுவ அதிகாரிகளுக்கு வழங்குகிறார்.
இந்தியன் பிரீமியர் லீக் போட்டிக்கான 12 வது சீசன் மார்ச் 23ஆம் தேதி சென்னையில் துவங்க இருக்கிறது. எப்போதும் ஐபிஎல் துவக்க விழா என்றால் கோலாகலமான ஒன்றாக இருக்கும்.ஆனால், இம்முறை அதை தவிர்த்துவிட்டு அதற்க்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட் தொகையை புல்வாமா தாக்குதலில் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ராணுவ வைப்பு நிதிக்கு கொடுக்க முடிவு செய்து அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ.
மேலும், கடந்த முறை துவக்க விழாவிற்கு பிசிசிஐ 15 கோடி ரூபாயை ஒதுக்கியது. இம்முறை ராணுவ நிதிக்கு கொடுக்க 20 கோடியை பிசிசிஐ ஒதுக்கியது. இதனை வரும் ஐபிஎல் தொடரின் துவக்க விழாவில், தோனி மற்றும் கோஹ்லி இருவரும் ஒதுக்கப்பட்ட தொகையை ராணுவ அதிகாரிகளுக்கு வழங்குகிறார்.