ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 2 ஆண்டு தடைக்குப் பிறகு சிஎஸ்கே அணி களமிறங்கியது. லீக் சுற்று ஆட்டங்களில் சிறப்பாக ஆடிய சிஎஸ்கே 2-வது இடம் பிடித்து பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
பிளே-ஆப் சுற்றின் முதல் ஆட்டத்தில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சிஎஸ்கே வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. இறுதி ஆட்டத்தில் ஹைதராபாத் அணியுடன், சிஎஸ்கே மீண்டும் மோதும் நிலை ஏற்பட்டது. லீக் சுற்றில் 2 ஆட்டங்கள், பிளே-ஆப் சுற்றில் ஒரு ஆட்டம் என அனைத்திலும் சிஎஸ்கே வென்றிருந்ததால் உறுதியுடன் களமிறங்கியது.