ஐபிஎல் 2023: சாம்பியன் பட்டம் வென்ற பிறகு ஓய்வு குறித்து தோனி கூறியது என்ன?

MSdhoni RetirementIPL

வெற்றிக்கு பிறகு தோனி, ஓய்வு முடிவு குறித்து உடல் ஒத்துழைத்தால் ரசிகர்களுக்காக இன்னும் ஒரு சீசன் விளையாடுவேன் என கூறியுள்ளார்.

MSD RetireSaid
MSD RetireSaid [Image – Screenshot Twitter IPL]

மழைக்கு பிறகு நேற்று ரிசர்வ் டே-யில் குஜராத் நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி ஐபிஎல் வரலாற்றில் 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. குஜராத் அணி முதலில் பேட் செய்து 20 ஒவர்களில் 214 ரன்கள் குவித்தது. அதன்பிறகு சென்னை அணி பேட் செய்ய வரும் போது மழை குறுக்கிட்டு  ஆட்டம் நள்ளிரவு 12.10 க்கு மீண்டும் தொடங்கியது.

MSD Rayudu JAddu
MSD Rayudu JAddu [Image- Twitter/@CSK]

ஆட்டம் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு டக்வர்த் லூயிஸ் விதிப்படி சென்னை அணிக்கு 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. சென்னை அணி வெற்றிக்காக குறிப்பாக கேப்டன் தோனிக்காக அணியின் வீரர்கள் கடுமையாக போராடினர் என்றே கூறலாம். தோனிக்கு இது கடைசி ஐபிஎல் ஆக இருக்கும் பட்சத்தில் அவருக்கு கோப்பையை பரிசாக அளிக்க வேண்டும் என அணியின் வீரர்கள் குஜராத்தின்  பந்துவீச்சு சவால்களை சமாளித்து 5-வது முறையாக வெற்றி கோப்பையை வென்றெடுத்தனர்.

CSK Champion 2023
CSK Champion 2023 [Image-Twitter/@CSK]

வெற்றிக்கு பிறகு பேசிய தோனி, ஓய்வு பெற இது தான் சரியான தருணமாக இருக்கிறது. அப்படி எல்லாருக்கும் நன்றி கூறிவிட்டு எளிதாக ஓய்வு பெற முடியும், ஆனால் ரசிகர்கள் எனக்கு காட்டிய அன்பு மிகவும் அளவு கடந்தது. நான் எங்கு சென்றாலும், எந்த மைதானத்தில் சென்று விளையாடினாலும் என் மீது அவர்கள் செலுத்தும் அன்புக்கு எல்லையில்லை.

Dhoni lifts Jaddu
Dhoni lifts Jaddu [Image- Twitter/@CSK]

ஆனால் கடினமான ஒன்று என்னவென்றால் இன்னும் 9 மாதங்கள் தீவிரமாக பயிற்சி செய்து அடுத்த ஒரு ஐபிஎல் சீசன் விளையாடுவது தான். எது எப்படியிருந்தாலும் என் உடல் ஒத்துழைக்கவேண்டும். எனக்கு ஓய்வு குறித்து முடிவு செய்ய இன்னும் 6-7 மாதங்கள் இருக்கின்றன. அப்படி நான் அடுத்த ஐபிஎல் சீசன் விளையாடுவதாக இருந்தால் அது ரசிகர்களுக்கு நான் தரும் அன்பு பரிசாக இருக்கும். ஆனால் அது எளிதான ஒன்றாக இருக்கப்போவதில்லை.

Dhoni IPL
Dhoni IPL [Image-Twitter/@IPL]

எனக்கு அவர்கள் கொடுத்த அன்பு மற்றும் பாசத்திற்கு நான் எதாவது செய்யவேண்டும் என நினைக்கிறேன், அதற்கு அடுத்தவருட ஐபிஎல் தொடரில் நான் விளையாடி என்னிடம் இருந்து ரசிகர்களுக்கு நான் பரிசு கொடுக்க விரும்புகிறேன் என கூறியுள்ளார். இதனால் அடுத்த ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது, எனினும் தோனி விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து, அவர் கூறியது போல் இன்னும் 6-7 மாதங்கள் பொறுத்திருக்க வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்