IPL 2018:3 முறை இறுதிப்போட்டி..!டாப் ஆர்டர் பேட்டிங் டீம்…!இருந்தாலும் தோல்விக்கு காரணம் என்ன ?
இந்திய அணி கேப்டன் விராட் கோலி ரயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இம்முறையும் தலைமை வகிக்கிறார். 3 முறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்த போதிலும் அந்த அணி கோப்பையை வெல்வது எட்டாக் கனியாகவே உள்ளது.
கடந்த சீசனில் ஒட்டுமொத்த அணியும் படுமோசமாக செயல்பட்டதால் கடைசி இடத்தையே பிடிக்க முடிந்தது. பலவீனமான பந்து வீச்சால் அனைத்து ஆட்டங்களிலும் ரன்களை வாரி வழங்கியிருந்தது பெங்களூரு அணி. இம்முறை பந்து வீச்சை பலப்படுத்த அணி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ரிஸ்ட் ஸ்பின்னரான யுவேந்திரா சாஹலுடன், பாரம்பரிய ஸ்பின்னரான வாஷிங்டன் சுந்தர் கைகோர்த்துள்ளார். பவன் நெகி, முருகன் அஸ்வின், மொயின் அலி ஆகியோரும் சுழல் கூட்டணியில் உள்ளனர்.
இவர்களுடன் வேகப் பந்து வீச்சில் டிம் சவுதி, கிறிஸ் வோக்ஸ், மொகமது சிராஜ், உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, குல்வந்த் கேஜ்ரோலியா, கோரே ஆண்டர்சன் ஆகியோர் இணைந்துள்ளனர். இவர்களில் கோரே ஆண்டர்சன், கிறிஸ்வோக்ஸ் ஆல்ரவுண்டர்கள்.
பேட்டிங்கில் கோரே ஆண்டர்சன், குயிண்டன் டி காக், பிரெண்டன் மெக்கல்லம், டிவில்லியர்ஸ் ஆகியோருடன் விராட் கோலியும் மிரட்ட தயாராக உள்ளார். இவர்களுடன் சர்பராஸ் கான், பார்த்தீவ் படேல், மனன் வோரா, மந்தீப் சிங் ஆகியோரும் நம்பிக்கை அளிக்கக்கூடும்.
ரூ.3.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள வாஷிங்டன் சுந்தர் மீது இந்த முறை அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. முக்கியமாக பவர்பிளேவில் அவர், ரன்குவிப்பை கட்டுப்படுத்துவதில் துருப்பு சீட்டாக இருக்கக்கூடும். அதிரடி பேட்ஸ்மேன்கள், திறமையான ஆல்ரவுண்டர்களுடன் தற்போது பந்து வீச்சும் பலப்படுத்தப்பட்டுள்ளதால் பெங்களூரு கூடுதல் பலத்துடன் இந்த சீசனை சந்திக்கிறது.
அணி விவரம்
விராட் கோலி (கேப்டன்), டி வில்லியர்ஸ், கிறிஸ் வோக்ஸ்,சர்ப்ராஸ் கான், யுவேந்திரா சாஹல், உமேஷ் யாதவ், பிரெண்டன் மெக்கலம், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, குயிண்டன் டி காக், மொகமது சிராஜ், கோரி ஆண்டர்சன், காலின் டி கிராண்ட் ஹோம், முருகன் அஸ்வின், பார்த்தீவ் படேல், மொயின் அலி, மன்தீப் சிங், மனன் வோரா, பவன் நெகி, டிம் சவுதி, குல்வந்த் கேஜ்ரோலியா, அனிகெட் சவுத்ரி, பவன் தேஷ்பாண்டே, அனிருத்தா அசோக் ஜோஷி.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.