IPL 2018:200 ரன்கள் அடிப்பது கூட அபாத்தான ஒன்றாகிவிட்டது!தோனியின் அதிரடி பேட்டிங் பக்கா மாஸ் !ரோஹித் சர்மா
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரும், ஐ.பி.எல் தொடருகான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோஹித் சர்மாவும் தனது ட்விட்டர் பக்கம் மூலம் தோனிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 12 ஆவது போட்டியில் பஞ்சாப் அணி சென்னை அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
பஞ்சாப்- சென்னை அணிகள் மோதிய ஐ.பி.எல். போட்டி மொகாலியில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் களம் இறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக விளையாடிய கிறிஸ் கெய்ல் 63 ரன்களைக் குவித்தார்.
தொடர்ந்து ஆடிய சென்னை அணியின் கேப்டன் தோனி, இலக்கை அடையும் நோக்கில் ரன்களை விரைந்து சேர்த்தார். இருப்பினும் அந்த அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 44 பந்துகளில் 79 ரன்கள் எடுத்த தோனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.இந்நிலையில் தோனியின் பேட்டிங்கை கிரிக்கெட் உலகமே பாராட்டி வருகின்றது.தோல்வி அடைந்தாலும்,அவரின் பேட்டிங் திறனை குறித்து அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பதிவிட்டுள்ள ட்வீட்டில், தோனிக்கு பாராட்டு தெரிவித்துவிட்டு, இந்த காலகட்டத்தில் 200 ரன்கள் அடிப்பது கூட அபாத்தான ஒன்றாகிவிட்டது, இதை நேற்று உணர்ந்து கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.