IPL 2018: ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா கொல்கத்தா அணி ?கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதல்.!
ஐபிஎல் 11-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 13-வது ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.
இதில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – காம்பீர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் உள்ளன.கொல்கத்தா அணி தொடக்க ஆட்டத்தில் பெங்களூரை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதைத் தொடர்ந்து சென்னை, ஐதராபாத் அணிகளிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.
ஹாட்ரிக் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க கொல்கத்தா அணி கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு அந்த அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும்.
டெல்லி அணி முதல் இரண்டு ஆட்டத்தில் தோற்றது. பஞ்சாப்பிடம் 6 விக்கெட்டிலும், ராஜஸ்தானிடம் 10 ரன்னிலும் தோற்றது. 3-வது ஆட்டத்தில் மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த அணியில் ஜேசன்ராய் மிகப்பெரிய பலமாக உள்ளார். இதனால் அந்த அணியும் கொல்கத்தாவை வீழ்த்தும் வேட்கையில் உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.