Categories: ஐ.பி.எல்

IPL 2018: விராட் கோலி,ரெய்னா,ரோகித் சர்மாவை நெருங்கிய தோனி!எதில் தெரியுமா?

Published by
Venu

நேற்று இரவு புனேவில்  ஐபிஎல் போட்டியின் கடைசி 56வது லீக் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே நடைபெற்றது.

டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

பேட்டிங் ஆட களமிறங்கிய பஞ்சாப் அணியின் கெய்ல் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார், பின்ச் 4 ரன்களிலும், ராகுல் 7 ரன்களிலும் அவுட் ஆகி தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. இருப்பினும் 4வது விக்கெட்டுக்கு ஜோடியாக மனோஜ் திவாரி, மில்லர் 60 ரன்களைச் சேர்த்தனர்.

அடுத்து வந்த கருண் நாயர் அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் 5 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் உட்ப 54 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் உயரக் காரணமாக இருந்தார்.

இருப்பினும் சென்னை அணி கடைசி ஓவர்களில் சிறப்பாகப் பந்து வீசியதால் பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் எடுத்தது.

சென்னை அணி தரப்பில் என்கிடி 4 விக்கெட்டுகளையும், தாகூர், பிராவோ 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா, சஹர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பின்னர் பேட்டிங் ஆட வந்த சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அம்பாதி ராயுடு 1 ரன்னில் அவுட் ஆனார். டுபிளிசிஸ் 14 ரன்களிலும், சாம் பில்லிங்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள்.

5வது ஓவரில் 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி தடுமாறியது. அடுத்து வந்த ஹர்பஜன் சிங் ஓரளவிற்கு விளையாடி ஒரு சிக்சர், 2 பவுண்டரிகள் அடித்து கொஞ்சம் ஸ்கோரை உயர்த்தினார். அவர் அவுட் ஆன பின் வந்த தீபக் சஹர் அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் 3 சிக்சர்கள், 1 பவுண்டரி உட்பட 39 ரன்கள் எடுத்தார். அவருடைய ஆட்டத்தால் சென்னை அணிக்கு தெம்பு வந்தது.

பின்னர் சுரேஷ் ரெய்னா, தோனி ஜோடி சென்னை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. ரெய்னா 48 பந்துகளில் 2 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் உட்பட 61 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.

சென்னை அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வருட ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிராக வெற்றி பெற்ற சென்னை அணி, கடைசி ஆட்டத்தில் பஞ்சாப் அணியையும் வென்று வெற்றிக் களிப்புடன் அவர்களது லீக் ஆட்டங்களை முடித்துள்ளது.

இதனால் சி.எஸ்.கே 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பஞ்சாபை தொடரை விட்டு வெளியேற்றியது. இப்போட்டியில் சி.எஸ்.கே கேப்டன் தோனி 16 ரன் அடித்ததன் மூலம், ஐ.பி.எல் போட்டியில் 4000 ரன்களை எட்டினார். இதை எட்டும் ஏழாவது ஐ.பி.எல் வீரர் தோனி ஆவார்.

நான்காயிரம் ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி (4,948) முதலிடத்தில் இருக்கிறார். சுரேஷ் ரெயின் (4,931) 2-வது; ரோஹித் சர்மா (4,493) 3-வது, கவுதம் கம்பிர் (4,217) 4-வது, ராபின் உத்தப்பா (4,124) 5-வது, டேவிட் வார்னர் (4,014) 6-வது, தோனி (4,007) 7-வது இடத்திலும் உள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (27/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…

2 hours ago

வன்கொடுமை விவகாரம் : FIR எப்படி லீக்? ஞானசேகரன் மீது எத்தனை வழக்கு? காவல் ஆணையர் அருண் விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…

3 hours ago

தெற்கு வங்ககடலில் புதிய காற்று சுழற்சி…கனமழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் அலர்ட்!

சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

4 hours ago

லண்டன் சென்று வந்த பிறகு அண்ணாமலைக்கு என்ன ஆனது எனத் தெரியவில்லை-திருமாவளவன் பேச்சு!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

4 hours ago

FIR-ஐ வெளியிட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் – தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

5 hours ago

“எனக்கு நானே சாட்டையடி கொடுக்கப் போகிறேன்” பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

6 hours ago