IPL 2018: முஹாலியில் முரட்டுத்தனமான ஆட்டத்தை வெளிபடுத்திய கெயில் .!11 வது சீசனில் முதல் சென்சுரி..!
இன்று 16 வதுதொடர் முஹாலியில் உள்ள ஐஎஸ் பிருந்தா ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறும் போட்டியில் கிங்க்ஸ் XI பஞ்சாப் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன .
இதில் டாஸ் வென்ற கிங்க்ஸ் XI பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதில் முதலாவது களமிறங்கிய கிங்க்ஸ் XI பஞ்சாப் 20 ஓவர் முடிவில் 193 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தனது அபார ஆட்டத்தை வெளிபடுத்தியது .
முதலாவது களமிறங்கிய கிங்க்ஸ் XI பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக ராகுல் மற்றும் கெயில் களம் இறங்கினர்.
ராகுல் மற்றும் அகர்வால் 18 ரன்களிலும் ,நாயர் 31 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார் .
ஆட்டத்தின் தொடக்க வீரராக களமிறங்கிய கெயில் இந்த சீசனில் 104 ரன்களை குவித்து தனது அபார ஆட்டத்தை வெளிபடுத்தி முதலாவது செஞ்சுரியை பதிவு செய்தார் .