IPL 2018: பிராவோவால் வெற்றியை ருசித்த சென்னை அணி …! 2 ஆண்டுகள் காத்திருந்த சென்னை ரசிகர்களுக்கு இந்த விருதைச் சமர்ப்பிக்கிறேன் பிராவோ உருக்கம் …!

Default Image

ஐ.பி.எல். தொடரின் 11வது ‘சீசன்’ இன்று துவங்கியது. முதல் லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், மும்பை அணியும் மோதியது.இந்நிலையில் 11ஆவது சீசன் ஐபிஎல் டி-20 கிரிக்கெட் முதல் போட்டியில் மும்பை அணி பேட்டிங் மும்பையில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

20 ஓவர்களின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்துள்ளது.தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா (15), எவின் லூயிஸ் (0) ஆகியோர் பெவிலியன் திரும்பினர்.

அதில் சூர்யகுமார் யாதவ் 43 , இஷான் கிசன் 40 ரன்கள் அடித்தனர்.ஹர்டிக் பாண்டியா 22(20),க்ருனால் பாண்டிய 42(22) ரன்கள் அடித்தனர்.இவர்கள் இருவரின் பட்னர்ஷிப்பில் 100 ரன்கள் அடித்தனர். அற்புதமாக பந்துவீசிய சென்னை அணி வீரர் ஷேயின் வாட்சன் 4-0-29-2 என அவர் ஓவரை சிறப்பாக வீசினார்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து வருகின்றது.தொடக்க வீரர்களாக சென்னை அணியில் வாட்சன் மற்றும் அம்பத்தி ரயுடா களமிறங்கியுள்ளனர்.இதில் வாட்சன் 16 ரன்களில் விக்கெட்டை இழந்துள்ளார்.பாண்டியா வீசிய பந்தில் வாட்சன் விக்கெட்டை இழந்தார்.தற்போது வரை சென்னை அணி 5 ஓவர்களின் முடிவில் 39 ரன்கள் எடுத்துள்ளது. ரயுடா ரெய்னா ரன்களுடன் களத்தில் உள்ளனர்.பாண்டியா வீசிய பந்தில் வாட்சன் விக்கெட்டை இழந்தார்.

அதனை தொடர்ந்து சுரேஷ் ரெய்னா 4 ரன்களுக்கு 6 ஓவரில் ஹரிதிக் பாண்டியாவிடமும் அம்பத்தி ராயுடு 22 ரன்களுக்கு6.3 ஓவரில் மார்கண்டேவிடமும் அதன்பின் டோனி 5 ரன்களுக்கு8.3 ஓவரில் மார்கண்டேவிடமும் தனது விக்கெட்டுகளை பரிகொடுத்தனர்.

பின்னர் வந்த ஹர்பஜன்,ஜடேஜா,வுட் பெவிலியனை நோக்கி நடையை கட்டினர்.களத்தில் தனியாக நின்று பிராவோ 68 ரன்களை அதிரடியாக குவித்தார்.பின்னர் அவ விக்கெட்டை பறிகொடுத்தார்.கடைசியாக களமிறங்கிய ஜதேவ் அதிரடியாக விளையாடி கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தார்.பின்னர்  அவர் 24 ரன்களுடன் வெற்றியை உறுதி செய்தார்.

4 ஓவர்களில் வெறும் 25 ரன்கள்… 30 பந்துகளில் 68 ரன்கள்… பிராவோ – ஆட்டநாயகன் விருது பெற்றார்!பின்னர் பேசிய பிரவோ   “இந்தத் தருணத்துக்காக 2 ஆண்டுகள் காத்திருந்த சென்னை ரசிகர்களுக்கு இந்த விருதைச் சமர்ப்பிக்கிறேன்”என்று கூறினார் .

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

PM Modi - Manipur riot - Live
muthu (9) (1)
Natarajan - CSK
Kailash Gahlot
Seeman - DMK
edappadi - vijay
Ragging Death in Gujarat