ஒரு விக்கெட் மீதமிருந்த நிலையில் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் அணிகள் மோதியது .இந்த போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
களமிறங்கிய மும்பை அணி ரோஹித் (11),கிஷன் (9),லூவிஸ் (29),க்ருனால் பாண்டியா (15),பொல்லார்ட் (28) ரன்களை எடுத்து வெளியேறினர்.
பின்னர் மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 147 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் யாதவ் மற்றும் பொல்லார்டு தலா 28 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன்கள் ஆகும்.
ஐதராபாத் தரப்பில் சந்தீப் சர்மா, ஸ்டான்லேக், கெளல் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் ரஷித் கான், ஷாகிப் அல் ஹசன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடக்க வீரர்களாக சஹா மற்றும் தவான் களமிறங்கினர்.
இதில் சஹா (22)ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.பின்னர் களமிறங்கிய கேப்டன் வில்லியம்சன் (9) ,தவான் (45),மனிஷ் பாண்டே (11),ஷாகிப்(12),யூசுப் பதான் (14) ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர்.
சந்தீப் சர்மா ,சித்தார்த் கவுள்,ரசித் கான் டக் அவுட் ஆகினர். மும்பை அணி தரப்பில் மார்கண்டே 4 விக்கெட்டுகள்,முஷ்டபிசூர் 3 விக்கெட்டுகள் ,பூம்ரா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடைசி பந்தில் ஒரு விக்கெட் மீதமிருந்த நிலையில் வெற்றி பெற்றது .
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…