IPL 2018: ஐபிஎல் போட்டிகள் சென்னையில் இருந்து மாற்றும் திட்டம் இல்லை …!விளையாட்டில் இருந்து அரசியலை ஒதுக்கி வையுங்கள் ராஜீவ் சுக்லா அதிரடி …!
விளையாட்டில் இருந்து அரசியலை ஒதுக்கி வையுங்கள் என்று ஐபில் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் , சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், ஐ.பி.எல். போட்டி நடத்தப்பட்டால் அதை தடுத்து நிறுத்த முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என கூறினார்.
ஐபிஎல்லுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைவரும் வானில் கறுப்பு பலூன்களை பறக்கவிடுமாறு கேட்டுக்கொண்ட வேல்முருகன் அடையாளமாக சேப்பாக்கம் மைதானம் முன்பு கறுப்பு பலூன்களை பறக்கவிட்டார்.
இந்நிலையில் ஐபில் தலைவர் ராஜீவ் சுக்லா ஐபிஎல் போட்டிகள் சென்னையில் இருந்து மாற்றப்படாது, மாற்றும் திட்டமும் இல்லை. விளையாட்டில் இருந்து அரசியலை ஒதுக்கி வையுங்கள் என்று ஐபில் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.