IPL 2018: ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

Default Image

11வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த ஐதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் முதலில் சென்னை அணியை பேட்டிங் செய்ய பணித்தாா்.

முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவா்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை சோ்த்தது. பின்னா் 183 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ஐதராபாத் அணி முதலில் இருந்தே தடுமாற்றத்துடன் விளையாடியது .

தீபக் சாஹர் பந்தில் ஐதராபாத் அணியின் தொடக்க பேட்ஸ் மேன்களை நிலை குலைய இதன் மூலம் ஒருவா் கூட தாக்குபிடிக்காமல் அடுத்தடுத்து வெளியேறினா்.

இதனால் ரிக்லி புய் 0(5), மனிஷ் பாண்டே 0(2), தீபக் ஹூடா1(7) ரன்களை மட்டும் எடுத்தனா்.
பின்னா் களமிறங்கிய ஷகிப் அல்-ஹசன் கேப்டன் வில்லியம்சனுடன் இணைந்து இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்த மீண்டும் சென்னை அணியின் பந்து வீச்சாளா் கரண் ஷர்மா தன்னுடைய முதல் ஓவாிலேயை ஷகிப் அல்-ஹசனையும் 24(19) வீழ்த்தி வெற்றியை உறுதி படுத்தி கொண்டனா்.

மறுமுனையில் இருந்த மனம் தளாராத கேப்டன் வில்லியம்சன் தன்னுடைய ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிபடுத்தி கொண்டுடே இருந்தாா். யூசுப் பதானும் அவருக்கு நம்பிக்கையாக கூட பயணித்து வந்தாா். மேலும், சென்னை அணியின் பந்து வீச்சாளா் பிராவோ பந்தில் வில்லியம்சனும் கேட்ச் 84(51)கொடுத்து ரசிகா்களை ஏமாற்றி வெளியேறினாா். பின்னா் அடுத்த அதிரடி நாயகனான யூசுப் பதானும் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினாா். பின்னா் வந்த ரஷீத் கான் சிறப்பான அதிரடியால் 4 பந்துகளை எதிா்கொண்டு 17 ரன்களை சோ்த்தாா். இருப்பினும் பிராவோவின் சிறப்பான யாக்கா் பந்தில் தடுமாறி வெற்றி இலக்கை தொட தவறியது ஐதராபாத் . இதனால் சென்னை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை அணியின் சாா்பில் தீபக் சாஹர் 3 விக்கெட்டும் , கரண் ஷர்மா, பிராவோ, ஷர்டுல் தாகூர் ஆகியோா் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினா். இந்த போட்டியில் வெற்றி பெற்றதான் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியிலில் முதலிடம் பிடித்துள்ளது கூறிப்பிடதக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்