சென்னை சூப்பர் கிங்ஸ் வீர்ர்கள் தங்கியுள்ள ஹோட்டலுக்கு அரசியல் தலைவர்களின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அரசியல் தலைவர்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகள் காவிரிப் போராட்டத்தை திசை திருப்புகின்றன எனவே போட்டிகளை சென்னையில் நடத்தக் கூடாது என்று போராட்டாக்காரர்கள் சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.