.ஜெய்ப்பூரில் நடக்க இருக்கும் 15வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.
இதுவரை நடந்துள்ள 14 ஆட்டங்களின் ஐதராபாத் அணி 3 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா 4 போட்டிகளில் 2 வெற்றி பெற்று, 4 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 3ல் 2ல் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.
அஜங்யா ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி, ஐதராபாத் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் தோல்வி அடைந்தது. மழையால் பாதிக்கப்பட்ட டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் வென்றது. பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்திலும் வென்றது. தொடர்ந்து மூன்றாவது வெற்றியை எதிர்நோக்கி களமிறங்குகிறது.
தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி முதல் ஆட்டத்தில் பெங்களூருவை வென்றது. இரண்டாவது ஆட்டத்தில் சிஎஸ்கேவிடம் தோல்வியடைந்தது. ஐதராபாத் அணியிடம் தோல்வியும், டெல்லியிடம் வெற்றியும் பெற்றது. தனது 5வது போட்டியில் மூன்றாவது வெற்றியை எதிர்நோக்கி களமிறங்குகிறது.
ரன் மழையை எதிர்பார்க்கலாம்
டெல்லிக்கு எதிராக நடந்த போட்டியின்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. ஆனால், இன்று மழைக்கான வாய்ப்பு இல்லை. ஹாட்ரிக் வெற்றிக்காக ராஜஸ்தானும், மூன்றாவது வெற்றிக்காக கொல்கத்தாவும் விளையாடுவதால், அதிக ரன் குவிப்பை எதிர்பார்க்கலாம்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…