சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று ஹைதராபாத்தில் நடைபெறும் 20வது ஆட்டத்தில் மோதியது.
இந்நிலையில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளார்.
களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் அடித்தது.சென்னை அணியின் பேட்டிங்கில் அதிக பட்சமாக அம்பதி ரயுடா 78,சுரேஷ் ரெய்னா 54,தோனி 25 ரன்களும் அடித்தனர்.ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில் புவனேஸ்வர்,ரசித் கான் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 183 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதனையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் மட்டுமே அடித்தது.அதிகபட்சமாக வில்லியம்சன் 84,யூசுப் பதான் 45 ரன்கள் அடித்தனர்.சென்னை அணியின் பந்துவீச்சில் சாகர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
சென்னை அணியில் பவர்ப்ளேயில் 32 ரன்கள் மட்டுமே சேர்த்து, 2 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த சிஎஸ்கே அணியை ராயுடுவும், ரெய்னாவும் தூக்கி நிறுத்தினார்கள் என்றால் மிகையல்ல. இருவரின் கூட்டணி 100 ரன்களுக்கு மேல் சேர்த்து அணியின் ரன்குவிப்புக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
நடுவரிசையில் இறங்கி பேட்டிங்கில் மிரட்டிய ராயுடு, 37 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்தார். இவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
அதேசமயம், பந்துவீச்சில் சாஹர் தொடக்கத்திலேயே 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி சன்ரைசர்ஸ் சரிவுக்கு வித்திட்டார். ஒட்டுமொத்தத்தில் இது சிஎஸ்கே அணியின் கூட்டு உழைப்புக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.
இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி 5 போட்டிகளில் ஒரு தோல்வி 4 வெற்றிகள், என 8 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் அணி 5 போட்டிகளில் விளையாடி 2 தோல்வி, 3 வெற்றிகள் என 6 புள்ளிகளுடன் 4-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெற்றி தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள சென்னை அணியின் வீரர் ஹர்பஜன் சிங், “ வீழ்த்திவிடலாம் என்று நினைத்தாயோ. சூதுவாது தெரியாம சென்னை கிட்டயே ச்சலம்பலா. இங்க ஃபேமஸ் தம் பிரியாணி சாப்புட வரல தம் பிடிச்சி வெளயாட வந்தோம். சாலா பாஹ உந்தி சஹார் சிரக தீஸ்தாவுறா ஒப்பனிங் ல இறக்குவோம் அம்பத்தி ராயுடுவ. பௌலர்ஸ்க்கு எல்லாம் டெரர் ஆய்டும் அருமை சன்ரைசர்ஸ்” என்று சென்னை அணியின் வீரர் ஹர்பஜன் சிங் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. சொல்லப்போனால், கடந்த மூன்று…
சென்னை: சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் திடீரென எண்ணூரில் நிறுத்தப்பட்டது. இதனால், சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தின் ரயில்…
கோவை : காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர்,…
நவி மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி0 போட்டிகள், 3…
ராஜஸ்தான் : ஜெய்ப்பூர் - அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் முன் இன்று வெள்ளிக்கிழமை காலை டிரக் மற்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…